ரஞ்சன் கோகாய்க்கு எதிரான புகாரை நீதிபதி பாப்டே தலைமையிலான குழு விசாரிக்கிறது.
ஹைலைட்ஸ்
- குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளத
- தலைமை நீதிபதிக்கு எதிராக முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியர் புகார்
- உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலக வேண்டும் என கூறிவருகிறார்.
New Delhi: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் 3 நீதிபதிகள் குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அடுத்து இரண்டாம் மூத்த நீதிபதியாக இருப்பவர் நீதிபதி பாப்டே, தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகார் குறித்து பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்டு குழு விசாரணை நடத்த உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சிறப்பு அமர்வு கடந்த சனிக்கிழமை இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, தம்மீதான புகார்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய சக்தி இருப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி பாப்டே தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். ரஞ்சன் கோகாய்க்கு பிறகு, தலைமை நீதிபதியாக இருக்கும் பாப்டே, தனது விசாரணை குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரை இணைத்துள்ளார்.
இதுகுறித்து நீதிபதி பாப்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு என்னை நியமித்துள்ளார்.
நானும், உச்சநீதிமன்றத்தில் எனக்கு அடுத்து மூத்த நீதிபதியாக விளங்கும் என்.வி.ரமணா, பெண் நீதிபதியான இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவை விசாரணைக்கு ஏற்படுத்த முடிவு செய்துள்ளேன்.
இந்த குழுவினர், ரகசிய அறையில், தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்காக அந்த பெண்ணுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
(With inputs from PTI)