கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது.
New Delhi: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பெண் ஊழியர் ஒருவர் கோகாய் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். விசாரணைக்கு பின்னர் இந்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஏப்ரல் 19-ம் தேதி அளிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய் மீதான புகார் குறித்து விசாரிக்க கமிட்டி அடைக்கப்பட்டது. அந்த கமிட்டி நடத்திய விசாரணையின் முடிவில் கோகாய் மீதான புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்து வருகிறார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பெண் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதினார். இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி மீது புகார் அளித்த பெண் கூறியிருந்தார்.
இந்தநிலையில், கோகாய் மீதான புகாரை ஊச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.