Supreme Court Ayodhya verdict: சமூக ஊடகங்களை கண்காணிக்கவும் பிரச்சனையைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு எதிராக செயல்படவும் தயாராக இருக்க வேண்டுமென முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
New Delhi//Lucknow: அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், உத்தர பிரதேச மாநிலத் தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
உத்தர பிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் காவல்துறை. உயரதிகாரி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் உள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கடைசி வேலை நாளான நவம்பர் 15க்கு முன்னர் பல ஆண்டுகால சர்ச்சைக்குரிய வழக்கான பாபர் மசூதி இடிப்பு - ராம ஜென்ம பூமி வழக்கிற்கான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி எஸ்.ஏ. போப்டே, அயோத்தி வழக்கை “உலகின் மிக முக்கியமான ஒன்று” என்று கூறியிருந்தார். தீர்ப்பிற்கு முன்னதாக இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து சமாதானத்திற்கான முறையீடுகள் வந்துள்ளன.
உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தீர்ப்பு குறித்து தேவையற்றை அறிக்கைகள் எதுவும் கொடுக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையைக் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று இரவு லக்னோவில் உயர் காவல் துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் மூன்று மணி நேர ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க இரண்டு ஹெலிகாப்டர்கள் வைத்திருக்க வேண்டும். லக்னோவில் ஒன்றும் அயோத்தியில் ஒன்று இருக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
உத்தர பிரதேசம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட மூத்த அதிகாரிகளும் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு செல்லவும். இரவில் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் முகாமிட்டு எல்லாவகையிலும் அமைதியைக் காக்க கூட்டங்களை நடத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களை கண்காணிக்கவும் பிரச்சனையைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு எதிராக செயல்படவும் தயாராக இருக்க வேண்டுமென முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.