This Article is From Apr 28, 2020

'பொறுமையை கடைபிடிப்பது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக கருதுகிறேன். திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. போலீசாரின் நடவடிக்கைகளும் குறைந்திருக்கிறது. 

ஏப்ரலில் இணைய வழியில் மொத்தமே 305 வழக்குகள்தான் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஹைலைட்ஸ்

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே NDTVக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்
  • ஊரடங்கால் குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக தலைமை நீதிபதி பாப்டே கருத்து
  • பொறுமையை கடைபிடிப்பது காலத்தின் கட்டாயம் என்கிறார் பாப்டே
New Delhi:

''கொரோனாவால் ஒட்டுமொத்த நாடே ஊரடங்கில் இருக்கும் சூழலில், ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் நாடாளுமன்ற சட்டமன்றங்கள், நீதித்துறை, மற்றும் செயலாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் ஆகியோர் நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த நாடே பொறுமையை கடைபிடித்துக் கொண்டிருக்கிறது'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே NDTV க்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து பாப்டே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

அரசின் அனைத்து மட்ட துறைகளும் கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. தொற்று நோய் அல்லது பேரிடர் சூழலை செயலாக்கத்துறையில் இருக்கும் அதிகாரிகள்தான் முக்கியமாக எதிர்கொள்வார்கள். 

இந்திய குடிமக்களை அரசு ஆபத்தில் தள்ளுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடைபெறும் சூழல்களில் நீதிமன்றம் நிச்சயம் தலையிடும். 

நீதிபதிகளும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். நடப்பாண்டின்படி நாங்கள் 210 நாட்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் நாங்கள் நாள்தோறும் 205 வழக்குகளை முடித்து வைத்தோம். ஆனால் ஏப்ரலில் இணைய வழியில் மொத்தமே 305 வழக்குகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக கருதுகிறேன். திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. போலீசாரின் நடவடிக்கைகளும் குறைந்திருக்கிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 


 

.