சர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
ஹைலைட்ஸ்
- Top court adjourned legal challenge to centre's Article 370 move
- Petitioner ML Sharma, lawyer-activist, said he will file amended petition
- I read your petition for half an hour, couldn't understand: Chief Justice
New Delhi: 370வது பிரிவின் கீழ் ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
தலைமை நீதிபதி கோகாய், நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் எஸ்.ஏ நாசர் ஆகியோர் சர்மாவின் மனுவை விசாரித்தனர்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் “இந்த மனுவில் ஏராளமான தவறுகள் உள்ளன. மனுவை அரை மணி நேரம் படித்து பார்த்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. குடியரசு தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. குடியரசி தலைவர் உத்தரவு என்றால் எதை குறிப்பிடுகிறீர்கள் அதில் உள்ள அம்சங்கள் என்ன, ஏன் அதனை ரத்து செய்ய கோருகிறீர்கள். எந்த விவரமும் மனுவில் இல்லை. என்ன மாதிரியான வழக்கு என புரியவில்லை.
இந்த மனு தள்ளுபடி செய்துவிடக் கூடியது. ஆனால் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 5 வழக்குகள் உள்ளன. பிழைகளை சரி செய்து வழக்கறிஞர்கள் மீண்டும் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.