ஆகஸ்ட் 28, 2017-ல் அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனார் தீபக் மிஸ்ரா
New Delhi: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இன்றுடன் பணி நிறைவு செய்கிறார். இந்நிலையில் அவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னர் பேசும்போது, ‘தற்போது நான் இதயத்திலிருந்து பேசுகிறேன். இன்று மதியம் என் மூளையின் எண்ணத்திலிருந்து பேசுவேன்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த 10 நாட்களில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கின. ஓர் பாலின ஈர்ப்பு முதல் ஆதார் கார்டு விவகாரம் வரை பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் ஓய்வு பெறுகிறார் நீதிபதி தீபக் மிஸ்ரா.
இந்நிலையில் இன்று நீதிமன்ற நடவட்டிக்கைகள் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு மூத்த வழக்கறிஞர், ‘நீங்கள் பல்லாண்டு காலம் நலமாக வாழ வேண்டும்’ என்று பாடியுள்ளார். அதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘தற்போது நான் இதயத்திலிருந்து பேசுகிறேன். இன்று மதியம் என் மூளையின் எண்ணத்திலிருந்து பேசுவேன்’ என்று உருக்கமாக பதிலளித்தார்.
தீபக் மிஸ்ராவை அடுத்து, நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
ஜனவரி 17, 1996 ஆம் ஆண்டு, ஒரிசா நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் தீபக் மிஸ்ரா. அதைத் தொடர்ந்து அவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 19, 1997-ல் அவர் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
23, 2009-ல் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் மே 24, 2010-ல் பதவி உயர்வு பெற்றார்.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 10, 2011-ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 28, 2017-ல் அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனார்.