பதவியேற்ற 2 மணி நேரத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து ஆவணங்களில் கையெழுத்திட்டார் ம.பி. முதல்வர் கமல்நாத்.
Bhopal: மத்திய பிரதேசத்தில் முதல்வராக பதவியேற்ற 2 மணி நேரத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து ஆவணங்களில் கையெழுத்திட்டார் கமல்நாத்.
மத்திய பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்தது.
அதனை நிறைவேற்றும் வகையில், பதவியேற்ற பின் முதல் கோப்பில் கமல்நாத் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார். கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு 5 வருடம் ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், முதல் வாக்குறுதி முடிந்து விட்டது. 2வது அடுத்து என்று தெரிவித்துள்ளார்.