This Article is From Jun 17, 2020

கொரோனாவால் முதல்வரின் தனிச்செயலாளர் பலி: அரசுப் பணியில் யாரையும் இனி இழக்கக்கூடாது: ஸ்டாலின்

இனி ஒரு முன்களப்பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது.

கொரோனாவால் முதல்வரின் தனிச்செயலாளர் பலி: அரசுப் பணியில் யாரையும் இனி இழக்கக்கூடாது: ஸ்டாலின்

கொரோனாவால் முதல்வரின் தனிச்செயலாளர் பலி: அரசுப் பணியில் யாரையும் இனி இழக்கக்கூடாது: ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் முதல்வரின் தனிச்செயலாளர் பலி
  • அரசுப் பணியில் யாரையும் இனி இழக்கக்கூடாது: ஸ்டாலின்
  • அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல்வரின் தனிச்செயலாளர் உயிரிழந்த நிலையில், அரசுப் பணியில் யாரையும் இனி இழக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்தியளவில், கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 48,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,782 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா
தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் கொரோனாவால் மறைவெய்தி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைச் செயலகம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

"பரிசோதனை மற்றும் புதிய கொரோனா நோய்த் தொற்று குறித்த தினசரி சதவீத வாரியான விவரங்கள் ஏதும் இல்லாத நிலையில் சென்னையில் "நோய்த் தொற்று வளைவில்" (Epi curve) அசாதாரணமாக திடீரென்று "நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின்" எண்ணிக்கை குறைவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் பிரப்தீப் கவுர் கூறியிருப்பது மிகவும் உன்னிப்புடன் கவனிக்கத்தக்கது.

இதற்கு உரிய விளக்கத்தை அளிப்பதோடு - கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கையில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுய பாதுகாப்பிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களும் வழங்கிட வேண்டும் எனவும், இனி ஒரு முன்களப்பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.