This Article is From Jul 24, 2018

குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து சென்னையில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள் நிறைய உள்ளன

குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து சென்னையில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சமீப காலமாக, குழந்தைகள் மீதான வன்கொடுமை தாக்குதல் குறித்த செய்திகள் அதிகமாக வெளிவருவதை காண்கிறோம். வீட்டில் இருந்து பொது வெளி வரை அனைத்து இடங்களிலும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

கடந்த வாரம், சென்னை அயனாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமை செய்தி அனைவரின் மனதையும் பாதித்தது. குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள் நிறைய உள்ளன. எனவே, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹாப்பினஸ் டவர்ஸ் என்ற குடியிருப்பில், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரியா, மஹா என்ற இரண்டு பெண்கள், இந்த விழிப்புணர்வை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர். “முதலில் வீட்டிலிருந்து நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வன்கொடுமை என்றால், அவற்றை கண்டறிவது குறித்தும், பாதிப்படைந்தால் அது குறித்து பெற்றோர்களிடன் பேசுவது பற்றியும் குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டும்.” என்று நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் பிரியா தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், “அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் குறித்து தெரிந்து கொள்வதில்லை. குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, நாம் வசிக்கும் இடத்தில் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இது போன்ற தாக்குதல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பெற்றோருடன் விவாதிக்க உள்ளனர். தொடுதல், வன்கொடுமை, உதவி, பெற்றோரிடம் தகவல் கூறுவது போன்ற அடிப்படை விஷயங்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத் தரவும் முடிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உள்ள ஆசிரியர்கள் ஒன்றிணைந்து குழந்தைகளுடன் உரையாட உள்ளனர். ஹாப்பினஸ் டவர்ஸ் குடியிருப்பு பகுதியினர் மட்டுமின்றி, சுற்றியுள்ள மற்ற குடியிருப்பு பகுதி மக்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துளனர். “ வன்கொடுமை அரங்கேறுவதை செய்தியாக தெரிந்து கொள்வதை விடவும், அது குறித்த விழிப்புணர்வுடன் மேற்கொண்டு, இது போன்ற தாக்குதல்கள் நடைப்பெறாமல் தடுக்க வேண்டும்” என்றார் பிரியா.

வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி, ஓஎம்ஆர் சாலை ஹாப்பினஸ் டவர்ஸ் வளாகத்தில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை விழிப்புணர்வு உரை நடைப்பெறுகிறது. வரும் 28 ஆம் தேதி காலை 6 மணிக்கு, குழந்தைகள் பங்கு கொள்ளும் விழிப்புணர்வு வாக்கத்னும் நடைப்பெற உள்ளது. தொடர்பு எண்: +91 82200 05256.

.