SaveSujith : நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் அதிநவீன இயந்தரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்க என்எல்சி, ஓஎன்ஜிசி மீட்புக் குழு திட்டமிட்டது.
இதையடுயத்து 32 மணிநேரம் கழித்து தற்போது என்எல்சி, ஓஎன்ஜிசி மீட்புக் குழுவினர் 20 பேர் இணைந்து திருச்சி எல்&டி இடமிருந்து ரிக் என்ற அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும்போது பிடி வலுகாமல் இருக்க, அதிர்வு காரணமாக அவன் கீழிறங்காமல் இருக்க ஏர் லாக் மூலம் அவனது கை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 அடி ஆழம் துளையிட 3 முதல் 3.30 மணி நேரம் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதனால் சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் மேலும் 6 மணி நேரம் ஆகும் என தெரிகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டுமென ட்விட்டரில் தமிழக மக்கள் பலர் #SaveSujith #PrayforSujith என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.