பலர், குரங்கைக் கண்டு அஞ்சி, தலை தெறிக்க ஓடினார்கள்.
சீனாவில் இருக்கும் ஹேஃபேய் விலங்கியல் பூங்காவில் யாங் யாங் என்கின்ற சிம்பன்ஸி மனிதக் குரங்கு உள்ளது. இந்த குரங்கு சமீபத்தில் திடீரென்று தனது கூட்டை விட்டு வெளியே வந்தது. 12 வயதாகும் இந்த மனிதக் குரங்கு வெளியே வந்ததால், பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். பலர், குரங்கைக் கண்டு அஞ்சி, தலை தெறிக்க ஓடினார்கள். சிம்பன்ஸியை எப்படியாவது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று பூங்கா ஊழியர் ஒருவர் முயன்றார்.
அவரை யாங் யாங், ஓங்கி உதைத்ததில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். தொடர்ந்து யாங் யாங், பூங்காவில் இருக்கும் ஓர் கட்டடத்தின் மேற்குரையின் மீது ஏறி, விளையாட்டுக் காட்டியது. இதற்கு மேல் குரங்கைப் பிடிப்பது கடினம் என்று நினைத்துள்ளனர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார். ஆகவே, மயக்க மருந்தைப் பயன்படுத்தி யாங் யாங்-ஐப் பிடித்தனர். தொடர்ந்து அதை பத்திரமாக கூண்டில் அடைத்தனர்.
இது சம்பந்தமான வீடியோவை கீழே பார்க்கலாம்:
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஹெஃபாய் விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஜப்பான் விலங்கியல் பூங்காவிலிருந்து ஒரு சிம்பன்ஸி குரங்கு தப்பித்து, கம்பம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டது. பல மணி நேரம் பூங்கா ஊழியர்களை அலைக்கழித்த பின்னர்தான் குரங்கு பிடிக்கப்பட்டது.
Click for more
trending news