This Article is From Apr 26, 2019

இண்ஸ்டாகிராமை பார்த்து ரசிக்கும் சிம்பன்ஸி: வைரல் வீடியோ

ட்விட்டரில் 6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்

இண்ஸ்டாகிராமை பார்த்து ரசிக்கும் சிம்பன்ஸி: வைரல் வீடியோ

பலரும் விதவிதமான கமெண்ட்டுகளை எழுதி வருகின்றனர்

ஒரு வீடியோ இணைய  உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித குரங்கான சிம்பன்ஸி அசாத்தியமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை தானே தேர்ந்தெடுத்து விருப்பமானதைப் பார்க்கிறது. இந்த வீடியோ 5 நாட்களுக்கு முன்பு இண்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக் ஹோல்ஸ்டன் என்பவர் பதிவிட்டுள்ளார். 1.5 மில்லியன் பார்வையாளர்கள் இதை பார்வையிட்டுள்ளனர். ட்விட்டரில் சுமார் 6 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

சிம்பன்ஸி இண்ஸ்டாகிராம் பக்கத்தை ஸ்கோரல் செய்து, வீடியோ மற்றும் போட்டோகளை தேர்ந்தெடுத்து பார்க்கிறது. இதோ சிம்பனிஸி போனை பயன்படுத்தும்  வீடியோ இதோ….

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் திகைத்து விட்டனர். பலரும் விதவிதமான கமெண்ட்டுகளை எழுதி வருகின்றனர். இந்த வீடியோவைக் கொண்டு பல்வேறு வகையான மீம்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

இங்கிலாந்தில் கென்ட் பல்கலைக் கழகத்தில் பிஹெச் டி செய்யும் ஆய்வாளாரான “சிம்பன்ஸி மீது அக்கறையுள்ளவரகளால் இதை மகிழ்ச்சியாக பார்க்க முடியாது. அதன் உண்மையான மகிழ்ச்சியை கொன்று விட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

காட்டு விலங்கினங்களை வீட்டில் வைத்து வளர்க்க விரும்பும் யோசனை நிச்சயமாக ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்களின் வாழ்விடமான சரணாலயத்தை நல்லபடியாக அமைத்துக் கொடுப்பது மட்டுமே அதற்கான தீர்வாக இருக்கும் என்றும் கூறினார்.

வீடியோவை பார்க்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பண்ணி தெரியப்படுத்துங்கள்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.