This Article is From Aug 24, 2020

சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசர நிலைக்குப் பயன்படுத்த ஒப்புதல்!

சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசரநிலை பயன்பாட்டுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது

Advertisement
உலகம்

சீன அரசு கொரோனா தடுப்பூசியை அவசரநிலைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது

Beijing:

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் போராடி வருகின்றன. இந்நிலையில், கொரோனாவில் பிறப்பிடமான சீனாவில், தற்போது தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

சீனாவில் தடுப்பூசி மேலாண்மை சட்டத்தின்படி, பொதுச் சுகாதாரம் கடுமையான சூழலுக்கு உள்ளாகும் அவசரநிலையின் போது,  மருத்துவ பணியாளர்கள், தொற்று நோய் தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர்களைப் பாதுகாக்கும் வகையில், மருத்துவ பரிசோதனைகளில் இருக்கும் தடுப்பூசிகளைப் பயன்படுத்த முடியும். 

அந்த வகையில், தற்போது அவசர பயன்பாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்திக் கொள்ள சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது. தொற்றுநோய்க்கு உள்ளாகி குறைவான காலக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளிவந்த செய்திகளின்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் (எஸ்.ஓ.இ) ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராகி வருவதாகவும், அவசர பயன்பாட்டிற்காக சினோபார்ம் உருவாக்கிய உள்நாட்டு செயலற்ற தடுப்பூசியில் இரண்டு தேர்வுகளை முன்னணி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த மாதம் 22 ஆம் தேதி அவசரநிலை பயன்பாட்டிற்கான தடுப்பூசியை பரிசோதனை செய்ய தொடங்கியது. அப்போது உள்ளூர் மருந்து நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முதலில் சிலருக்கு செலுத்தப்பட்டது. அதில் சிலருக்கு பக்க விளைவுகள் இருந்தன. ஆனால், காய்ச்சல் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று, சினோபார்ம் நிறுவனம் செயலற்ற தடுப்பூசிகளை மூன்றாம் கட்டமாக பரிசோதனை செய்ய பெரு, மொரோக்கோ, அர்ஜெண்டினாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement