This Article is From Nov 23, 2018

சீனாவில் கட்டப்பட்ட புதிய பாலத்தால் 6000 மீன்கள் இறப்பு

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணத்தில் பாலம் ஒன்றை அங்குள்ள அரசாங்கம் கட்டிவந்த நிலையில் அங்குள்ள 6,000 வகை சீன ஸ்டேர்ஜன் மீன்கள் திடீரென்று இறந்தன

சீனாவில் கட்டப்பட்ட புதிய பாலத்தால் 6000 மீன்கள் இறப்பு
Shanghai:

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணத்தில் பாலம் ஒன்றை அங்குள்ள அரசாங்கம் கட்டிவந்த நிலையில் அங்குள்ள 6,000 வகை சீன ஸ்டேர்ஜன் மீன்கள் திடீரென்று இறந்தன.

அங்குள்ள பாதுகாக்கப்பட வேண்டிய வனபகுதியில் பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதாகவும், கட்டுமானத்தின் போது அதிக படியான சத்தம் ஏற்பட்டதால் மீன்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இறந்ததாக விசாரணை குழு நடத்திய வந்த ஆய்விலிருந்து தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து அப்பாலப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஆற்றின் அருகே இதுவரை ஏற்பட்ட மாசுபாட்டால் அங்கிருந்த ‘யாங்டிஸ் மேர்மேட்' என்னும் பாஜி டால்ஃவின் வகை மீன் சிறிது காலத்துக்கு முன் அழிந்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அங்குள்ள சுற்றுச்சூழல் மாசுவினால் ஏற்கனவே பல வகை உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்க்கு வந்துவிட்டதாகவும் இந்த பாதிப்பு அதன் அழிவை இன்னும் மிகைப்படுத்தும் என சீன பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

சுமார் 1,085 க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர வகைகள் அழிவின் நுனிக்கு வந்துவிட்டதாகவும் அதை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்னும் அகில உலக இயற்கை பாதுகாப்பு கழகம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.