This Article is From Apr 01, 2020

கொரோனா அச்சுறுத்தல் குறைந்தது… ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்த சீனா!!

China Coronavirus: “சீனாவில் இருக்கும் அனைவரும், இனி நமக்கு வைரஸ் தொற்று வராது என்றும், அது வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் நம்புகின்றனர்”

கொரோனா அச்சுறுத்தல் குறைந்தது… ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்த சீனா!!

China coronavirus: பல விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் சீனாவின் இந்த ‘வெட் மார்க்கெட்களுக்கு’ தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • சீனாவில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது
  • இந்த சந்தைகள் 'வெட் மார்க்கெட்' என்றழைக்கப்படுகின்றன
Washington:

China Coronavirus: சீனாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பன்மடங்கு குறைந்துள்ளதால், மீண்டும் அங்கு வௌவால்கள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை விற்கும் ‘வெட் மார்க்கெட்' சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, வௌவால்களில் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அதை விற்கும் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த சந்தைகளை ‘வெட் மார்க்கெட்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்த வெட் மார்க்கெட் ஒன்றில் இருந்துதான், 55 வயது நபர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா தொற்று பரவியிருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது திறக்கப்பட்டுள்ள வெட் மார்க்கெட் ஒன்றுக்கு ‘எ மெயில் ஆன் சண்டே' என்னும் பத்திரிகையின் செய்தியாளர் சென்றுள்ளார். அவர், “கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் இந்த சந்தைகள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இப்போதும் இருக்கின்றன,” என்று கூறி மேலும் அச்சமூட்டுகிறார். 

அதே நேரத்தில் இந்த சந்தைகளைச் சுற்றி பல பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு இருப்பதால் சந்தையின் புகைப்படம், நாய்கள் கொல்லப்படுவதற்கான படங்கள், ரத்தம் வடியும் தரைத்தளம், கூண்டுகளில் மிருகங்களை வைத்துள்ளது உள்ளிட்ட எது குறித்தும் ஆதாரங்கள் கிடைப்பதில்லையாம். 

அமெரிக்க அரசு தரப்பு, உஹான் நகரத்தில் உள்ள ஹூனான் கடல் உணவு மார்க்கெட்தான் கொரோனாவின் மையமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டுகிறது. 

இதை உலக சுகாதார நிறுவனமும் ஒப்புக் கொள்வது போல, “உஹானில் இருக்கும் கடல் உணவு சந்தை ஒன்றில் இருந்துதான் கொரோனா வைரஸ் பவியிருக்கும் என்று பல ஆதாரங்கள் மூலம் தெரிகிறது,” என்று ஜனவரி 12 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. 

கொரோனா வைரஸ் தொற்று, உலகிற்கு வந்து 4 மாதங்கள் கடந்துள்ளன. சீனா, அதிலிருந்த ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் மற்ற உலக நாடுகள் அழுத்தம் தாங்காமல் திணறி வருகின்றன. இந்த வைரஸை பலரும் உஹான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்றுதான் அழைக்கிறார்கள். 

“சீனாவில் இருக்கும் அனைவரும், இனி நமக்கு வைரஸ் தொற்று வராது என்றும், அது வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் நம்புகின்றனர்,” என்கிறார் களத்தில் இருக்கும் அந்த செய்தியாளர். 

பல விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் சீனாவின் இந்த ‘வெட் மார்க்கெட்களுக்கு' தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்ப்பதாக சீன அரசு இல்லை. 
 

.