இந்திய ஏற்றுமதியாளர்களுடன் சீன அதிகாரிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
New Delhi: மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச வர்த்தகத்தில் நிகழும் மாற்றங்களால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக சீன அதிகாரிகள் இந்திய தொழில்துறையினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். குறிப்பாக தடையில்லா வர்த்தகம் குறித்து பேசப்படவுள்ளது என்றார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவுடனான இந்திய பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது. அரிசியை அதிகளவு இறக்குமதி செய்து கொள்ள சீனா முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.