This Article is From May 31, 2018

சீனா – பாகிஸ்தான் சாலை திட்டத்தில் உள்நோக்கம் கிடையாது: சீன அதிபர் ஜீ ஜின்பிங்

சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வரும் இந்தச் சாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது

சீனா – பாகிஸ்தான் சாலை திட்டத்தில் உள்நோக்கம் கிடையாது: சீன அதிபர் ஜீ ஜின்பிங்

Chinese President Xi Jinping has defended the Belt and Road Initiative despite India raising concerns

ஹைலைட்ஸ்

  • சீனா ‘பட்டுப்பாதை திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது
  • சீனாவை ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைப்பதே நோக்கமாகும்
  • ஊடுருவலை ஊக்குவிக்கும் என்கிற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Beijing: பெய்ஜிங்:

சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் ‘ஒரே மண்டலம், ஒரே சாலை திட்டத்தால்’ பல்வேறு நாடுகள் பயன்பெறும். இதில் எந்த உள்நோக்கமுமில்லை என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறினார்.

உலகளவில் வல்லரசாக வளர்ந்து வரும் சீனா, தனது பொருளாதாரத்தை விரிவுப்படுத்துவதற்காக ‘பட்டுப்பாதை திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதை மேலும் விரிவுப்படுத்துவதற்காக ‘ஒரே மண்டலம்; ஒரே பாதை’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது. சீனாவை ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை இணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனா இதற்காக பல ஆயிரம் கோடியை செலவழித்து வருகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வரும் இந்தச் சாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலை ஊக்குவிக்கும் விதமாக இந்த சாலை அமைவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் காஷ்மீரில் நடந்தது.

இந்நிலையில், "இந்தத் திட்டம் உலக நாடுகளின் நன்மைக்காக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த உள்நோக்கமுமில்லை" என்று சீன அதிபர் பேசினார். சீனாவின் பாவோ நகரில் நடந்த ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியதாவது, " ‘ஒரே மண்டலம், ஒரே சாலை’ தி்ட்டம் சீனாவின் முக்கிய திட்டமாகும். இந்த திட்டம் அமைந்தால் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் சாலை, நீர்வழி போக்குவரத்தின் மூலம் இணைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் உலகமயமாக்கல் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்படும். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கானது" என்று அவர் பேசினார்.
.