Read in English
This Article is From Sep 18, 2018

அமெரிக்க பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் இறக்குமதி வரி விதித்து சீனா பதிலடி

60 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ. 4.3 லட்சம் கோடி. அமெரிக்கா மேலும் வரியை உயர்த்தினால் அதற்கு நாங்களும் பதிலடி கொடுப்போம் என்கிறது சீனா.

Advertisement
உலகம்

அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக சீனா வரி விதித்துள்ளது.

Beijing, China:

அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து சீனாவுக்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் என அழைக்கப்படும் இந்த பொருளாதார யுத்தத்தால், பல்வேறு பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளன.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த வாரம் முதல் 200 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ. 14.5 லட்சம் கோடி) இறக்குமதி வரியாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சீன வர்த்தகர்கள் அதிர்ச்சியுற்றிருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 4.3 லட்சம் கோடி ) இறக்குமதி வரியாக விதிக்கப்படும் என்று சீனா இன்று அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement