This Article is From Nov 20, 2018

5 செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது லாங் மார்ச்- 2 டி

சீனாவில் ஒரு சுற்றுசூழல் செயற்கைகோளும், நான்கு நானோ செயற்கைகோள்களும் ஒரே ராக்கெட்டில் இன்று காலை சரியாக 7.40 மணிக்கு  விண்ணில் செலுத்தப்பட்டது.

5 செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது லாங் மார்ச்- 2 டி

சீயான்-6 விண்வெளியின் சுற்றுச்சூழல் ஆராய்சிகளை  தொடங்க  உள்ளது.

Beijing:

சீனாவில் ஒரு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைகோளும், நான்கு நானோ செயற்கைகோள்களும் ஒரே ராக்கெட்டில் இன்று காலை சரியாக 7.40 மணிக்கு  விண்ணில் செலுத்தப்பட்டது.  

லாங் மார்ச்-2 டி (Long March-2 D) எனப்படும் சீன வகை ராக்கெட்டில் இந்த ஐந்து செயற்கை கோள்களும் விண்ணிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டன. சீனாவில் உள்ள ஜீயுகுவான் செயற்கைகோள் மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள்கள் விண்ணில் உள்ள சுற்று வட்டப் பாதைக்கு சென்றடைந்துள்ளது. இந்த செயற்கை கோள்கள் சீனாவின் லாங் மார்ச் வரிசையில் 292-வது செயற்கைகோள்களாகும்.

சீயான்-6 விண்வெளியின் சுற்றுச்சூழல் ஆராய்சிகளை  தொடங்க  உள்ளது. நானோ செயற்கைகோள்கள்  என்பதால் இந்த ரக செயற்கை கோள்கள் 1லிருந்து 10 கிலோ எடை உடையதாக இருக்கும்.

.