This Article is From Jan 05, 2019

''போருக்கு தயாராக இருங்கள்'' - சீன ராணுவத்துக்கு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவு

முன்பை விட தற்போது சவால்கள் அதிகரித்துள்ளது. எனவே போருக்கு எந்த நிலையிலும் தயாராக இருங்கள் என்று ஜிங்பிங் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

''போருக்கு தயாராக இருங்கள்'' - சீன ராணுவத்துக்கு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவு

ஜிங்பிங்கின் உத்தரவு சீனாவின் அண்டை நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • எல்லைகளை பாதுகாக்க சீனா தீவிரம் காட்டுகிறது
  • தென் சீனக் கடல் பகுதியில் பிரச்னை செய்கிறது சீனா
  • எமர்ஜென்சியை எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் இருக்க வேண்டும் - ஜிங்பிங்
Shanghai:

சீன ராணுவம் போருக்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் தலைமை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் அதிபர் தரப்பில் இருந்து இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.

தெற்கு சினா பகுதியில் தைவான் உள்ளிட்ட நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை உள்ளது. இங்குள்ள தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால் ராணுவ பலத்தின் மூலம் அத்துமீற சீனா முயன்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் வெள்ளியன்று ராணுவ தலைமை அதிகாரிகளுடன் அதிபர் ஜிங்பிங் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து போருக்கு தயாராக இருக்கும்படி ராணுவத்திற்கு ஜிங்பிங் உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து ஜிங்பிங் வெளியிட்டுள்ள உத்தரவில், ''கடந்த நூறாண்டுகளில் உலகம் எவ்வளவோ மாறி விட்டது. பாதுகாப்பு யுக்திகளை திறமையாக கையாள்வது மற்றும் வளர்ச்சி அடைவது என 2 முக்கிய வேலைகளை சீனா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அவசர நிலையில் போர் வரலாம். அதற்கு ஏற்றாற்போல் சீன ராணுவம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய யுக்திகள், ராணுவ நடவடிக்கைகளை கையாள்வதில், சீன ராணுவம் நிபுணத்துவம் பெற வேண்டும்'' என்று கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.