Read in English
This Article is From Jun 04, 2018

தென்கிழக்கு ஆசியாவில் கால்பதிக்கும் இந்தியா!- சீனாவுக்கு நேரிடை சவால் விடுக்கிறதா?

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு உடன் இணைந்து இந்தோ- பசிபிக் பகுதிகளுக்கான விதிமுறைகளை வகுக்கும்

Advertisement
இந்தியா

PM Modi said India would work with ASEAN to promote a rules-based order in Indo-Pacific region (Reuters)

Highlights

  • ஆசிய நாடுகளுக்கு இடயேயான தனது தூதரக வளையங்களைப் பலப்படுத்தியுள்ளது
  • இது சீனாவுக்கு தரும் வெளிப்படையான சவாலாகவே பார்க்கப்படுகிறது
  • சீனா வெளிப்படை எதிர்ப்பலையை காண்பிக்குமா என சந்தேகம்
Singapore: விரைவில் நடைபெற உள்ள அமெரிக்கா - வடகொரியா சந்திப்பு, சமீபத்தில் வாஷிங்டன் மற்றும் பெய்ஜீங் இடையேயான புது குழப்பம், எனப் பதற்றங்கள் தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான தனது தூதரக மற்றும் பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்தியுள்ளது இந்தியா. இது சீனாவுக்கு தரும் வெளிப்படையான சவாலாகவே பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய உறவுகளை இந்தியத் தலைமை எந்தளவு எடுத்துச்செல்லும் எனத் தெரியவில்லை. ஆனால், இன்னும் 11 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி எந்த நம்பிக்கையில் இந்த பல்லாண்டு கால வாக்குறுதிகளை அளிக்கிறார் என்பது மோடிக்கு மட்டுமே வெளிச்சம்.  இது சீனாவை சீண்டுவதற்கான அறிகுறி என்றால் சீனா வெளிப்படை எதிர்ப்பலையைக் காண்பிக்குமா என்பது கேள்விக்குறி.

சமீப காலமாக பிரதமர் மோடி தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் உடனான அந்நிய கொள்கைகளை ஆதரித்து வருகிறார். தற்போது, உலகின் மிகவும் பரபரப்பான, வணிக நீர்ப்பாதை இந்தோனேஷியாவின் சபாங் நகரில் உள்ள ‘ஸ்டைரைட் ஆஃப் மலாகா’. அதன் மேற்கு நுழைவு வாயிலை மேற்பார்வை இடுவதற்காக, இந்தியா ஒரு துறைமுகத்தை அமைத்துக் கொள்ள இந்தோனேஷியா உடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் இட்டுள்ளார்.

Advertisement
மேலும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்கள் உதவி அளிப்பதற்கு சிங்கப்பூருக்கு இந்தியா உதவும் என ஒப்பந்தம் செய்துள்ளார் மோடி.

இதற்கு அடுத்ததாக மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்ற பிரதமர் மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது உடன் ஒப்பந்தம் இடவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவர் கடந்த மாதம் நடந்த மலேசிய தேர்தல் வென்று சமீபத்தில்தான் பிரதமர் ஆக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Advertisement
ஆக, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று முக்கிய தென்கிழக்கு நாடுகள் உடனான உறவை மோடி வலுப்படுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மோடி, "தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு உடன் இணைந்து இந்தோ- பசிபிக் பகுதிகளுக்கான விதிமுறைகளை வகுக்கும்" என அறிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.
Advertisement