Read in English
This Article is From Feb 27, 2019

ட்ரம்ப் - கிம் சந்திப்பு முக்கிய அம்சம் நிறைந்தது: சீன வெளியுறவுத்துறை அமைச்சர்

வடகொரிய தலைவர் கிம் ஹோனாய்க்கு​ இரண்டு நாட்களுக்கும் மேலாக ரயிலில் பயணித்து வந்துள்ளார்.

Advertisement
உலகம்

புதனன்று ட்ரம்ப் கிம்மை டின்னரிலும், வியாழனன்று இருவரும் முறையான சந்திப்பிலும் ஈடுபடவுள்ளனர்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று நடந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் - கிம் சந்திப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது சர்வதேச அரசியலிலும், அணு ஆயுத ஒழிப்பிலும் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கிம் ஹோனாய்க்கு இரண்டு நாட்களுக்கும் மேலாக ரயிலில் பயணித்து வந்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை ஜனவரியிலிருந்து 4 முறை சந்தித்துள்ளார். பீஜிங், இந்த சந்திப்பில் முக்கியப் பங்காற்றுகிறது என்றார்.

இந்த சந்திப்பில் எந்தவித பதட்டமான சூழலும் இருக்காது என்றும் சர்தேச அரசியலின் முக்கிய நிகழ்வுக்கு உடன் நிற்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ தெரிவித்துள்ளார். 

Advertisement

புதனன்று ட்ரம்ப் கிம்மை டின்னரிலும், வியாழனன்று இருவரும் முறையான சந்திப்பிலும் ஈடுபடவுள்ளனர். 

சிங்கப்பூர் சந்திப்பில் பேசபட்ட விஷயங்களின் தொடர்ச்சியாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹோனாயில் நடைபெறுகிறது.

Advertisement
Advertisement