This Article is From Sep 03, 2020

இந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!

இந்தியாவின் நடவடிக்கை சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான உள்ளதாக சீனா குற்றச்சாட்டு

இந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!

சீனாவின் வர்த்தக அமைச்சக செய்தித்தொடர்பாளர் காவ் ஃபெங்

இந்தியாவில் 118 செயலிகள் மீதான தடை விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலும் சீன செயலிகள் தான். இந்த நிலையில், தற்போது மீண்டும் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சீன செயலிகள் மீதான தடைக்கு, இந்தியாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'சீன செயலிகளை இந்தியா தடைசெய்துள்ளது. இது சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளது' தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா தனது தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

டிக்டாக் செயலிக்கு அடுத்தப்படியாக பப்ஜி செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தான் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சுமார் 175 மில்லியன் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. 

முன்னதாக சீனாவின் செயலிகள் இந்தியர்களின் தரவுகளைத் திருடி, அதை சீனாவுக்கு கடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பிறகு பிரபல சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இருப்பினும் ரெட்மி உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்களில் இந்த செயலிகள் மூன்றாம் தரப்பாக இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

.