Read in English
This Article is From Oct 17, 2018

உலகின் மிகப்பெரும் ஆளில்லா ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்த சீனா

ஃபெய்ஹாங் - 98 என்ற ட்ரோன்தான் தற்போது வரை உலகின் மிகப்பெரும் ட்ரோனாக கருதப்படுகிறது. இதன் எடை 1500 கிலோ

Advertisement
உலகம்

ஆளில்லா உளவு விமானங்களை தயாரிப்பதில் சீனா அதிக அக்கறை காட்டி வருகிறது.

Beijing:

உலகின் மிகப்பெரும் ஆளில்லா உளவு விமானத்தை சீன ராணுவம் வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் நுட்பங்களில் அசுர வளர்ச்சி பெற்றுள்ள சீனா, தற்போது ஆளில்லா உளவு விமானங்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஃபெய்ஹாங் - 98 என்ற 1500 கிலோ எடைகொண்ட ஆளில்லா உளவு விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த உளவு விமானம் ஷிபேய் ஒய்5பி என்ற விமானத்தின் மாதிரியில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

ஃபெய்ஹாங்கின் செயல்பாடு குறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, மிக எளிமையான முறையில் தரையில் இருந்து வானத்திற்கு செல்லவும், வேலைகளை எளிதாக மேற்கொள்ளும் வகையிலும் உளவு விமானத்தின் பாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி மூலம் சிறப்பான பல வசதிகளை இந்த ட்ரோன் கொண்டுள்ளதாக கூறினர்.

Advertisement