Read in English
This Article is From Oct 20, 2018

நீரில் மிதந்து பறந்து செல்லும் விமானத்தை முதன்முறையாக வெற்றிகரமாக சோதித்தது சீனா

தண்ணீரில் மிதக்கும் விமானத்தை நீண்ட காலமாக சீனாவின் விமான உற்பத்தி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வந்தது. ஹுபே மாகாணத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
உலகம்

தண்ணீரில் மிதந்து சென்ற விமானத்தின் கோப்பு படம்

Beijing:

சீனாவின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான ஏ.ஜி.600 ரக விமானம், தண்ணீரில் மிதந்து பின்னர் பறந்து சென்றதாகவும், இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் சீனா, விமானங்களில் புதுமை புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தண்ணீரில் மிதந்து பின்னர் பறந்து செல்லும் விமானத்தை வடிவமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இந்த நிலையில் ஹுபே மாகாணத்தில் இந்த விமானம் இன்று காலை 8.51-க்கு சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோதனை செய்யப்பட்ட ஏ.ஜி.600 ரக விமானம் சீனாவின் 3-வது மிகப்பெரிய விமானம் ஆகும்.

விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதற்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சீனாவின் விமான உற்பத்தியில் புதிய மைல் கல்லை ஏ.ஜி.600 விமான சோதனை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement