This Article is From Nov 09, 2018

இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க மியான்மரில் துறைமுகம் அமைக்கும் சீனா

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

Advertisement
உலகம்

சீனாவின் பாதுகாப்பு யுக்திகள் தொடர்பான நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Beijing:

வங்கக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் மியான்மர் நாட்டின் க்யாக்பியூ நகரில் துறைமுகம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான ஒப்பந்தங்கள் கடந்த நேற்று ஏற்படுத்தப்பட்டன.

ஏற்கனவே, பாகிஸ்தானின் குவாதர் நகரில் துறைமுகத்தை சீனா கட்டமைத்து வருகிறது. இதேபோன்று இலங்கையின் அம்பந்தோட்டாவில் துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.

இவற்றை தவிர்த்து வங்காள தேசத்தின் சிட்டகாங்க நகரில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு சீன அரசு பெருமளவில் நிதியுதவி செய்துள்ளது. மியான்மரை பொறுத்தவரையில் அங்கு சீனாவின் பொருளாதார சக்தி அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, வங்காள தேசம் ஆகிய நாடுகளில் துறைமுகம் அமைக்கும் பணியில் சீனா மும்முரம் காட்டி வருவது, இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் செயலாக கருதப்படுகிறது.
 

Advertisement
Advertisement