இந்தியா - ரஷ்யா தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகள்
Beijing: இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சி காரணமாக பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, சினாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கடந்த திங்களன்று சூப்பர் சானிக் ஏவகணைகளை பரிசோதனை செய்ததாகவும், இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சீன தயாரிப்பான சூப்பர் சானிக் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரசுகள், ஏவுகணைகளை இடை மறித்து தாக்கும் ஆயுதங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.
சீனாவின் சூப்பர் சானிக் ஏவுகணை ரஷ்யாவின் பிரம்மோஸை விட விலை குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.