This Article is From Jul 26, 2018

‘டோக்லாம் பகுதியில் சீனா மீண்டும் வேலையை ஆரம்பித்துவிட்டது!’- அமெரிக்கா பகீர் தகவல்

டோக்லாம் பகுதியில், சீனத் தரப்பு மீண்டும் வேலை ஆரம்பித்துவட்டதாக அமெரிக்க அரசின் அதிகாரி ஒருவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்

‘டோக்லாம் பகுதியில் சீனா மீண்டும் வேலையை ஆரம்பித்துவிட்டது!’- அமெரிக்கா பகீர் தகவல்

ஹைலைட்ஸ்

  • தெற்கு சீன கடல் முழுவதையும் தனது என உரிமை கொண்டாடுகிறது சீனா
  • பல நாடுகளுடன் சீனா, எல்லைப் போர் புரிந்து வருகிறது
  • இந்தியா- சீனா பலமுறை முன்னரும் எல்லைப் பிரச்னையில் மோதியுள்ளன
Washington:

இந்தியா - சீனா நாடுகளின் எல்லைகளுக்கு இடையில் உள்ள டோக்லாம் பகுதியில், சீனத் தரப்பு மீண்டும் கட்டுமான வேலை ஆரம்பித்துவிட்டதாக அமெரிக்க அரசின் அதிகாரி ஒருவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

டோக்லாம் பகுதியில் கடந்த ஆண்டு, சீன அரசு சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது.  அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மிகப்பெரும் பதற்றம் உருவானது. இரு நாடுகளின் ராணுவப் படைகளும் இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்பட்டு, போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர், டோக்லாம் பகுதியில் பணிகளை சீன அரசு விலக்கிக்கொண்டது. இதையடுத்து எல்லையில் நிலவி வந்த பதற்றம் தணிந்தது. 

இரு நாட்டு அரசு அதிகாரிகளும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான், இந்தியா - சீனா இடையில் நிலவி வந்த சலசலப்பு விலகியது. 

இந்நிலையில், தற்போது டோக்லாம் பகுதியில் தனது வேலையை சீனா மீண்டும் ஆரம்பித்துள்ளது என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை அமெரிக்க அரசு அதிகாரி அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார். இவர்தான் அமெரிக்காவுக்கான தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் ஆவார். 

அவர் மேலும், ‘சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து பூட்டானுக்கோ இந்தியாவுக்கோ கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை. இந்தியா, தனது வட எல்லையை தொடர்ந்து தீர்க்கமாக பாதுகாத்து வருகின்றது. இந்நிலையில், இந்த விஷயம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’ என்றுள்ளார். 

இந்தியாவோடு மட்டுமல்லாமல் தெற்கு சீன கடற்கரையோரம் இருக்கும் அனைத்து நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. குறிப்பாக வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளுடனும் சீனா தொடர்ந்து மோதி வருகிறது. தெற்கு சீன கடல் எல்லையில் இருக்கும் மொத்த இடமும் தனக்குத்தான் சொந்தம் என்று வரிந்துக்கட்டி வருகிறது சீனா. 

இதற்கு முக்கியக் காரணம், தெற்கு சீன கடற்கரையோரங்களில் தான் அபரிமிதமான கனிம வளங்கள் இருக்கிறது. மேலும், கடல் மார்க்க வர்த்தகத்துக்கு தெற்கு சீன கடல் எல்லையை முழுவதும் கட்டுப்படுத்துவது முக்கியம் என்று கூறப்படுகிறது.
 

.