Read in English
This Article is From Jun 18, 2020

கால்வான் பள்ளத்தாக்கு மீதான சீனாவின் உரிமைகோரல் ஏற்றுக்கொள்ள முடியாதது: இந்தியா

India-China: இரு நாடுகளின் படையினரும் திங்கட்கிழமையன்று, இரவு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் மோதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • கால்வான் பள்ளத்தாக்கு மீதான சீனாவின் உரிமைகோரல் ஏற்றுக்கொள்ள முடியாதது
  • இந்தியா - சீனாவின் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட ஒப்புதலுக்கு எதிரானது
  • இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனாவின் உரிமைக்கோரலை ஏற்றுக்கொள்ள முடியாத என அரசு கூறியுள்ளது. மேலும், இது கடந்த ஜூன் 6ல் இந்தியா - சீனாவின் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட ஒப்புதலுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது. 

இரு நாடுகளின் படையினரும் திங்கட்கிழமையன்று, இரவு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் மோதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பு வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொலைபேசி உரையாடலில் சீன பிரதிநிதி வாங் யக்கிடம் பேசும்போது, கால்வான் பள்ளத்தாக்கில் திங்களன்று ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலுக்கு சீன வீரர்களே நேரடியாக காரணம் என்றும், திட்டமிட்டே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் புதன்கிழமை, சீன வெளியுறவு அமைச்சக கூட்டத்தில் எடுக்கப்பட்ட கால்வான் பள்ளத்தாக்கு குறித்த சீன தளபதியின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “நாங்கள் முன்னதாக தெரிவித்தபடி, வெளிவிவகார அமைச்சரும், சீன பிரதிநிதியிடம், லடாக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஒரு தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர். 

Advertisement

ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும், ஜூன் 6 ம் தேதி மூத்த தளபதிகளிடையே எட்டப்பட்ட புரிந்துணர்வுகளை நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார். 

முன்னதாக, ஜூன் 6ம் தேதி நடந்த கூட்டத்தின் போது, ​​பாங்கோங் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள பல பகுதிகளிலும் ஏற்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக லெப்டினன்ட் பொது அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. சுமார் நான்கரை மணி நேரத்திற்கும் மேலான கூட்டத்தில், இந்தியன் நிலைமையை மீட்டெடுக்கவும், அனைத்து நிலைப்பாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சீன வீரர்களை உடனடியாக திரும்பப் பெறவும் இந்திய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
 

Advertisement

Advertisement