This Article is From Feb 17, 2020

தினமும் பரவும் கொரோனா - சீனாவில் 1,765 பேர் பலி

கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 100 பேர் இறந்துள்ளதாக ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தினமும் பரவும் கொரோனா - சீனாவில் 1,765 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 1,700-ஐ தூண்டியுள்ளது

ஹைலைட்ஸ்

  • தினமும் பரவும் கொரோனா - சீனாவில் 1,765 பேர் பலி
  • இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 1,700-ஐ தூண்டியுள்ளது
  • சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர்
Beijing, China:

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 1,700-ஐ தூண்டியுள்ளது என்றும், கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 100 பேர் இறந்துள்ளதாக ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மாகாணத்தின் சுகாதார ஆணையத்தின் அறிவின்படி சுமார் 1,933 பேர் இந்த நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 70,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொற்று பரவ தொடங்கிய ஹூபே மாகாணத்தில் தான் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிறு அன்று செய்தியாளர்களை சந்தித்த சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர், ஹூபே மாகாணத்திற்கு வெளியே இந்த கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு மெல்ல குறைந்து வருவதாகவும்,படி படியாக இந்த கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் 'டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்' "இந்த தொற்றுநோய் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை கணிக்க முடியாது" என்று எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா நோய் தொற்று தொடர்பாக சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த சர்வதேச வல்லுநர்கள் பலர் பெய்ஜிங்கிற்கு வந்துள்ளதாக டெட்ரோஸ் தந்து ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.