Read in English
This Article is From May 12, 2020

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர்கள்! பதற்றம் நீடிப்பு

2 நாட்களுக்கு முன்பு வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட மோதலை மத்திய அரசு மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸால் சீனாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

Advertisement
இந்தியா Edited by

இந்தியாவின் போர் விமான சுகோய் 30 எம்.கே.ஐ. மூலம் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Highlights

  • லடாக் எல்லைக்குள் ஊடுருவ சீன ஹெலிகாப்டர்கள் முயற்சி
  • இந்திய போர் விமானங்கள் லடாக் எல்லையில் கண்காணிப்பு பணி
  • 2 நாட்களுக்கு முன்பு சிக்கிம் எல்லையில் இந்தியா - சீனா மோதல் நடந்தது

இந்தியப் பகுதியான லடாக்கில் சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஊடுருவ முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்திய ராணுவத்தின் போர் விமானங்கள் லடாக்கிற்கு விரைந்துள்ளன. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. 

வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பாக இந்திய ராணுவத்திற்கும் - சீன ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று லடாக்கிற்குள் சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவ முயன்றுள்ளன.

'லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு மிக அருகே சீனாவின் ஹெலிகாப்டர்கள் வந்து சென்றன. இதையடுத்து இந்திய போர் விமானங்கள் லடாக் எல்லையில் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளன' என்று அதிகாரிகள் ஏ.என்.ஐ. செய்திநிறுவனத்திற்கு தெரிவித்துள்ளளனர். 

Advertisement

இந்தியாவின் போர் விமான சுகோய் 30 எம்.கே.ஐ. மூலம் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சமீபத்தில் ஹந்த்வாராவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தார்கள். இதையத்து, பாகிஸ்தான் விமானப்படையின் எப் -16 எஸ் மற்றும் ஜே.எஃப். - 17 எஸ் ஆகிய போர் விமானங்கள் எல்லை அருகாமை வந்து கண்காணித்தன. இதையடுத்து, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் விமானப்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மற்றும் தோய்ஸ் ஆகிய 2 இடங்களில் விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. இங்கு போர் விமானங்கள் நிரந்தரமாக நிறுத்தப்படுவது கிடையாது. ஆனால் கண்காணிப்பு பணிகள் மட்டும் ஆண்டுதோறும் இலகுரக விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். 

லடாக்கின் சில பகுதிகளை சீனா தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. இதற்கு அருகே அந்நாட்டின் ஹெலிகாப்டர்கள் அவ்வப்போது வேண்டுமென்றே வருவது உண்டு. 

Advertisement

2 நாட்களுக்கு முன்பு வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட மோதலை மத்திய அரசு மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸால் சீனாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அந்நாட்டிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. வுஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்ற குற்றச்சாட்டு சீனா மீது சுமத்தப்படுகிறது. 

இந்த விவகாரத்தால் சீனா - அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கடும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் உள்ள வெளி நாட்டு நிறுவனங்கள் இநதியாவுக்கு மாற்றப்படும் சூழல் உருவாகும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாக இந்தியாவை சீனா மிரட்ட முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement