லி வென்லிஅங்-யின் மரணம் சீன சமூக ஊடகங்களில் வருத்தத்தையும் அதே சமயம் கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
ஹைலைட்ஸ்
- வுஹான் மத்திய மருத்துவமனை, அங்கு வேலை பார்த்துவந்த மருத்துவர் லி வென்லி
- வுஹான் வைரஸ் தொற்றை கண்டறிந்த டாக்டர் லீ வென்லியாங் காலமானார்.
- அவர் கூறியதைப் போலவே ஒரு நோய் தொற்று பரவத் தொடங்கியது
Beijing: சீனாவில் பரவி வரும் வுஹான் வைரஸ் தொற்றை கண்டறிந்த டாக்டர் லீ வென்லியாங் காலமானார். 34 வயதான லீ கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் நாள், தனது சக மருத்துவர்களிடன் ஒரு வைரஸ் தொற்றினை பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதை யாரும் நம்பவில்லை. மாறாக சில நாட்கள் கழித்து அவர் பொய்யான வதந்தியை பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு அவர் கூறியதைப் போலவே ஒரு நோய் தொற்று பரவத் தொடங்கியது. தன் மேல் குற்றம் சாட்டப்பட்டதை மறந்து, லீ உடனடியாக தனது மருத்தவ சேவையைத் தொடங்கினார். மக்கள் மனதிலும், இணையத்திலும் அவர் ஹீரோவாக காட்சியளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரு நோயாளியின் மூலம் லீ வென்லியாங்-க்கும் அந்த நோய் தொற்று பரவியது.
இந்நிலையில், ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் மத்திய மருத்துவமனை, அங்கு வேலை பார்த்துவந்த மருத்துவர் லீ வென்லியாங் இறந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின்படி கண் மருத்துவரான லீ, பரவி வரும் வுஹான் வைரஸ் நோயால் பிப்ரவரி 7 ஆம் தேதி காலை 2.58 மணிக்கு இறந்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்ட லீ, அனைவரையும் கையுறையும், முகமூடியும் அணிய எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
லீ வென்லியாங்-யின் மரணம் சீன சமூக ஊடகங்களில் வருத்தத்தையும் அதே சமயம் கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு நெட்டிசன்கள் அவரை ஒரு தியாகி என்று பாராட்டி வருகின்றனர்.