This Article is From Jun 18, 2018

இந்தியா - பாகிஸ்தான் சந்திப்புக்கு ரூட் போடும் சீனா!

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முத்தரப்புச் சந்திப்பு நடக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ சாஹூய் தெரிவித்துள்ளார்

இந்தியா - பாகிஸ்தான் சந்திப்புக்கு ரூட் போடும் சீனா!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்

ஹைலைட்ஸ்

  • ஏப்ரல் மாதம் சீனாவுக்கு மோடி பயணம் செய்தார்
  • எஸ்.சி.ஓ மாநாட்டில் பங்கேற்க சில நாட்களுக்கு முன்னர் மோடி சீனா சென்றார்
  • இந்நிலையில், இந்தியா - பாக்., சந்திப்பு குறித்து சீன தூதர் பேசியுள்ளார்
New Delhi:

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் முத்தரப்புச் சந்திப்பு நடக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ சாஹூய் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சாஹூய், 'இன்னொரு டோக்லாம் சம்பவத்தை எனது நாடு தாங்காது. எனவே, எல்லையில் பாதுகாப்பு நிலவுவதை உறுதி செய்ய இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். எனக்குத் தெரிந்த சில இந்திய நண்பர்கள் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்புச் சந்திப்பு நடக்க வேண்டும் என்று கூறுகின்றனர். சீனா, ரஷ்யா மற்றும் மங்கோலியா நாடுகள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்றால், ஏன் அது இந்தியா, பாகிஸ்தான், சீனாவுக்கு இடையில் நடக்காது?' என்று கூறியுள்ளார்.

இது குறித்து வெளியுறவுத் தறை அமைச்சகம் எந்த வித அதிகாரபூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

இரு நாட்டுக்கும் இடையில் நிலவி வரும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வேறுபாடுகளை கலையும் நோக்கிலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் அடுத்த சந்திப்பு 2019 ஆம் இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் எஸ்.சி.ஓ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவாக சாஹூய், 'இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு என்பது மிகவும் சிக்கலும் பன்முகத்தன்மை கொண்டதும் ஆகும். அதை கவனத்துடனும் பொறுப்புடனும் கையாள வேண்டும். தொடர்ந்து நாம் இணைந்து இயங்குவதற்கான வழிகளை கண்டடைந்து செயல்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

.