This Article is From Jun 10, 2020

ஆம்! இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுலுக்கு பாஜக எம்.பி பதில்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பதிலளித்த லடாக் எம்.பி ஜம்யங் செரிங் நம்கியால், உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட எனது பதிலுக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன்

ஆம்! இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுலுக்கு பாஜக எம்.பி பதில்!

ஆம்! இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுலுக்கு பாஜக எம்.பி பதில்!

New Delhi:

லடாக்கில், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா, இல்லையா என்பதை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவு படுத்த வேண்டும், என காங்கிரஸ், எம்.பி., ராகுல் ட்வீட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு லடாக் பாஜக எம்.பி ஜம்யங் செரிங் நம்கியால் பதிலளித்துள்ளார். 

முன்னதாக நேற்றைய தினம், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில், 
லடாக்கில், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா? என ராஜ்நாத் சிங்கிடம் கிண்டலாக கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பதிலளித்த லடாக் எம்.பி ஜம்யங் செரிங் நம்கியால், உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட எனது பதிலுக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன், அவர்கள் மீண்டும் தவறாக வழிநடத்த முயற்சிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.


"ஆம், சீனர்கள் இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்" என்று தெரியவத்துள்ளது அவர், தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகளைப் பட்டியலிட்டார்: 

1962ல் காங்கிரஸ் ஆட்சியின் போது அக்சாய் சின் (37,244 சதுர கி.மீ). 

2008 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், சுமூர் பகுதியில் தியா பங்னக் மற்றும் சாப்ஜி பள்ளத்தாக்கு (250 மீ நீளம்).

டெம்ஜோக்கில் உள்ள ஜோராவர் கோட்டை 2008ம் ஆண்டில் மக்கள் விடுதலை ராணுவத்தால் அழிக்கப்பட்டது மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2012ம் ஆண்டில் அப்சர்விங் பாயிண்ட் அமைக்கப்பட்டது, மேலும் 13 சிமென்ட் வீடுகளுடன் சீன / புதிய டெம்ஜோக் / காலணியை உருவாக்கியது.

2008-2009ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது டங்டிக்கும் மற்றும் டெம்ஜோக்கிற்கும் இடையில் உள்ள டூம் செலியை (பண்டைய வர்த்தக மையம்) இந்தியா இழந்தது.

டெம்ஜோக் பகுதியின் கண்ணோட்டம். 2012 வரை காங்கிரஸ் ஆட்சியின் போது (sic) சீனா இந்திய நிலத்தை ஊடுருவியது தொடர்பான .ஒரு வரைபடத்தை அவர் இணைத்துள்ளார். 

arheu38


ராகுல் காந்தியும், மற்ற பிற காங்கிரஸ் தலைவர்களும், கடந்த சில வாரங்களாக, கிழக்கு லடாக்கில் சீன ஊடுருவல் மற்றும் எல்லை மோதல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளனர்.

மித் ஷா பேச்சு தொடர்பான செய்தியை இணைத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டரில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், லடாக்கில் இந்தியா-சீனா நிலைப்பாட்டைக் குறிப்பிடும் புகழ்பெற்ற உருது-பாரசீக கவிஞர் மிர்சா காலிப்பின் உருவாக்கத்தை குறிப்பிட்டு, 

"எல்லையில் நிலவும் உண்மையான நிலவரம் என்னவென்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அனைவரின் இதயத்தையும் மகிழ்ச்சிப் படுத்த இந்த சிந்தனை நல்ல யோசனையாக இருக்கும்" என ராகுல் கிண்டலாக தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் ட்விட்டிற்கு ஒரு சில மணி நேரத்தில் பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "கையில் வலி இருக்கும்போது சிகிச்சை பெறலாம், ஆனால் கையே வலியாக இருக்கும்போது ஒருவர் என்ன செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 'கை' என்பது ராகுல் காந்தியின் கட்சியான காங்கிரஸின் சின்னமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரிகளை 20ம் நூற்றாண்டில் கவிஞர் மன்சார் லக்னவி எழுதியுள்ளார். 'இதயத்தை' 'கையால்' மாற்றுவதன் மூலம் மேம்படுத்தினார்.

லடாக் பகுதி எல்லையில் நிகழ்ந்த மோதலால் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எல்லைப் பகுதியில் நிலவும் பதற்ற சூழலுக்கு அமைதியாக தீர்வு காண்பது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

.