This Article is From Oct 11, 2019

சீன அதிபர் Xi Jinping-ற்கு தனித்துவமான வரவேற்பு- அசத்திய சென்னை பள்ளி மாணவர்கள்!

President Xi Jinping- 2,000 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, ஜின்பிங்கின் முகமூடியை அணிந்து, அவரின் பெயரை சீன மொழியில் உருவாக்கியுள்ளனர்.

சீன அதிபர் Xi Jinping-ற்கு தனித்துவமான வரவேற்பு- அசத்திய சென்னை பள்ளி மாணவர்கள்!

Xi Jinping - பெயர் உருவாக்கலின்போது மாணவர்கள், இரு நாட்டுக் கொடிகளையும் ஏந்தி அசத்தியுள்ளனர்.

Chennai:

சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping), இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் (PM Narendra Modi) மாமல்லபுரத்தில் (Mahabalipuram) இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், சென்னையைச் (Chennai) சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஜின்பிங்கிற்கு தனித்துவமான வரவேற்பு ஒன்றைக் கொடுத்துள்ளனர். 

2,000 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, ஜின்பிங்கின் முகமூடியை அணிந்து, அவரின் பெயரை சீன மொழியில் உருவாக்கியுள்ளனர். பெயர் உருவாக்கலின்போது மாணவர்கள், இரு நாட்டுக் கொடிகளையும் ஏந்தி அசத்தியுள்ளனர்.

3rkigaas

Xi Jinping-ன் முகமூடியை அணிந்துள்ள மாணவர்கள். (PTI image)

பிரதமர் மோடிக்கும் ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் சீனாவின் உஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சி மாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 

ஜின்பிங்கின் இந்தியப் பயணத்திற்கு முன்னதாக சீனா, 'புதுடெல்லிக்கும் - இஸ்லாமாபாத்துக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்' என்று கூறியது, மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த சீன அதிபர் காஷ்மீர் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறியதோடு, "முக்கிய நலன்களுக்காக" பாகிஸ்தானை ஆதரிப்பதாக அவருக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாயின. 
 

qurint5

இரு நாட்டுக் கொடியை ஏந்தியுள்ள மாணவர்கள். (PTI image)

இந்நிலையில் சீனாவின் கருத்து குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு, நிலையானது மற்றும் தெளிவானது. சீனாவும் எங்கள் நிலையை நன்கு அறியும். மேலும், இது உள்நாட்டு விவகாரம். இந்த விவகாரத்தில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

.