This Article is From Sep 04, 2018

கிண்டர்கார்டன் பள்ளி விழாவில் “போல் டான்ஸ்” - அதிர்ச்சி தந்த சீன பள்ளி

3-6 வயது சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்

கிண்டர்கார்டன் பள்ளி விழாவில் “போல் டான்ஸ்” - அதிர்ச்சி தந்த சீன பள்ளி

சீனாவில் கிண்டர்கார்டன் பள்ளி ஒன்றின், தொடக்க விழாவில் மாணவர்களையும், பெற்றோர்களையும் வரவேற்க போல் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆபாசமான ஆடை அணிந்த பெண் ஒருவர் போல் டான்ஸ் செய்ததால், கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஷின்ஷஹுய் என்ற அந்த பள்ளிக்கு தனது குழந்தையை அழைத்துச் சென்று அதிர்ச்சிக்குள்ளான மைக்கேல் ஸ்டான்டெர்ட் என்பவர் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த அவர் சீனாவில் பணியாற்றி வருகிறார்.

3-6 வயது சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

 

 

இது குறித்து ஸ்டான்டெர்ட்டும் அவரது மனைவியும் தலைமை ஆசிரியரிடம் ஆட்சேபனம் தெரிவித்த போது, “ இது சர்வதேச நிகழ்ச்சி என்ற கண்ணோட்டத்தை தருகிறது. போல் டான்ஸ் ஒரு நல்ல உடல் பயிற்சி” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது, பெரியவர்களுக்கு வேண்டுமானால் சரியாக வரும், ஆனால் 3-6 வயது சிறுவர்களுக்கு எப்படி சரி வரும் என்கிறார் ஸ்டான்டெர்ட்.

மேலும், பள்ளி வளாகத்தில், போல் டான்ஸ் கற்றுத் தரும் பள்ளி ஒன்றின் விளம்பரமும், இருந்ததால், விளம்பர பணத்துக்காக இந்த போல் டான்ஸ் அரங்கேற்றப்பட்டதாக இருக்கலாம் என்று கூறுகிறார் அவர்.

பள்ளியின் இந்த செயல் பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் பெற்றது. போன் கல்வி ஆணையம், பள்ளி செய்தது தவறு என்றும், தலைமை ஆசிரியர் பெற்றோரிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது.

இதை அடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மன்னிப்பு கேட்டார். “தான் நடனத்தில் இருந்த ஆபாசத்தை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இது மோசமான அனுபவத்தை கொடுத்திருக்கும். அதனால், நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.