Read in English
This Article is From Aug 31, 2020

பேச்சுவார்த்தையை மீறி லடாக்கில் சீனா அத்துமீறல்! இந்திய ராணுவம் முறியடிப்பு!!

முன்னதாக கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், இந்திய-சீனாவுக்கிடையேயான சமீபத்திய மோதல் என்பது 1962க்கு பிறகான மிக மோசமான நிகழ்வு என கூறியிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

சமீபத்தில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீன ராணுவ துருப்புக்கள், ஒப்பந்தத்தை மீறி அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை இந்திய ராணுவம் எதிர் கொண்டு முறியடித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 29, 30 தேதிகளுக்கிடையே இரவில் நடைபெற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாங்கொங் த்சோ ஏரியின் தெற்கு கரையில் சீன மக்கள் விடுதலை இராணுவ துருப்புக்கள் இந்த மீறலில் ஈடுபட்டனர். அவர்கள் பேச்சு வார்த்தையின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் மீறியுள்ளனர்.” என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், உரையாடல் மூலம் அமைதியை பேணுவதற்கு இராணுவம் உறுதி  பூண்டுள்ளது என்றும், ஆனால் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் ராணுவம் தயாராக உள்ளது என்றும் இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுஷூலில் பிரிகேட் கமாண்டர் மட்டக் கொடி கூட்டம் நடந்து வருகிறது என்று அரசாங்கம் கூறுகிறது.

Advertisement

முன்னதாக கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், இந்திய-சீனாவுக்கிடையேயான சமீபத்திய மோதல் என்பது 1962க்கு பிறகான மிக மோசமான நிகழ்வு என கூறியிருந்தார்.

அதே போல சீனாவின் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வு கியான், “இருதரப்பு உறவுகளின் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, எல்லைப் பிரச்சினையை இதில் சரியான இடத்தில் பொறுத்தி அதற்கான சரியான தீர்வினை காண வேண்டும். இருதரப்பு உறவுகளை இயல்பான வளர்ச்சியின் சரியான பாதையில் கொண்டு வர உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement