தன்னுடைய கல்லூரிக் காலத்தில் அதை செய்ததாக பொதுவெளியில் கூறுகிறார். (courtesy, L: Instagram, R: Facebook)
ஹைலைட்ஸ்
- ஜோக்காக நினைத்து பார்வையாளர்களும் சிரித்தனர்
- அவரின் பதிவின் கீழ் பலரும் கண்டித்து கமெண்ட் செய்துள்ளனர்
- கமலஹாசனும் சாதாரணமாக இதை கடந்து சென்று விட்டார்.
New Delhi: நடிகர் சரவணன் தான் கல்லூரி காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் ஏறுவேன் என்று கூறியதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பி ஆகிக் கொண்டிருக்கிறது. அதில் பங்கேற்பாளராக சரவணன் கலந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு வார இறுதியிலும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் உரையாடுவார்.
இதில் நடிகை மீராமிதுன் சேரன் மீது சுமத்திய வீண்பழி குறித்து கமல்ஹாசன் பேசினார். டாஸ்க்கின் போது சேரன் என்னை தவறாது பிடித்து இழுத்ததாக மீராமிதுன் குற்றம் சாட்ட அவருக்காக குறும்படம் ஒன்றினை ஒளிபரப்பினார்.
தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசு பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். மேலும் பேசிய அவர் பெரும்பாலானோர் பணிக்கு செல்லும் அவசரத்தில் இடித்துக் கொண்டு செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் பஸ்ஸில் ஏறுபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, உடனே சரவணன் தனது கையை உயர்த்தி தான் அதை செய்ததாக கூறுகிறார். தன்னுடைய கல்லூரிக் காலத்தில் அதை செய்ததாக பொதுவெளியில் கூறுகிறார்.
அதிர்ச்சியடைந்த கமல்ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூற அரங்கில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டினர்.
இந்த வீடியோவை பாடகி சமூகவலைதளத்தின் வாயிலாக ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டிருக்கும் அவர் பேருந்தில் பெண்களிடன் தவறாக நடந்துகொண்டதாக கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பெண்களும் கைதட்டுகிறார்கள் என்று கூறி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் படிக்க - "பிக் பாஸ் 32வது நாள்"
மேலும் படிக்க - "பிக் பாஸ் மீது மீடு"