This Article is From Jul 31, 2019

மகாராஷ்டிராவில் வாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட 8 அடி நீள முதலை

அருகிலுள்ள ஆற்றிலிருந்து நீர் பெருங்கெடுத்து ஓடுவதால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு முதலை வாய்க்காலில் இறங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் வாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட 8 அடி நீள முதலை

வாய்க்காலிருந்து எட்டு அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Ratnagiri, Maharashtra:

மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான ரத்னகிரியில் உள்ள சிப்லூர் என்ற சுற்றுலா தலத்தில் சாலையோர வாய்க்கால் ஒன்றிலிருந்து எட்டு அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வாய்காலிருந்து வெளியே வரும் முதலையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. சிப்லூனின் தாதர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கடலோர மாவட்டத்தில் தோன்றிய வெள்ள மழையால் ரத்னகிரியில் இந்த சம்பவம் நடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அருகிலுள்ள ஆற்றிலிருந்து நீர் பெருங்கெடுத்து ஓடுவதால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு முதலை வாய்க்காலில் இறங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வாய்க்காலிருந்து சில விசித்திரமான சத்தங்கள் வந்ததையடுத்து உள்ளூர்வாசிகள் தீயணைப்பு படையையும் வனத்துறையையும் எச்சரித்தனர்.

“மழைக்காலத்தில் இந்த இடங்களில் இது மிகவும் பொதுவானது. இந்த முதலையை பாதுகாப்பாக மீட்டோம். அதற்கு எந்தவொரு காயமும் ஏற்படாததால் அது மீண்டும் ஆற்றில் விடப்பட்டது” என்று வன அலுவலர் ஐஏஎன்எஸிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்தது புறநகர் மும்பை என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் இது  நடந்தது ரத்னகிரியில் தான் என்று அதிகாரி கூறினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.