This Article is From Mar 17, 2019

டிவிட்டரில் பெயரை மாற்றிய பிரதமர் மோடி! - தொடர்ந்து பாஜக தலைவர்களும் பெயர் மாற்றம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியின் ‘நானும் காவலாளி தான்’ என்ற பிரசார வீடியோவை வெளியிட்டார்.

டிவிட்டரில் பெயரை மாற்றிய பிரதமர் மோடி! - தொடர்ந்து பாஜக தலைவர்களும் பெயர் மாற்றம்!

Elections 2019: ’நானும் காவலாளி தான்’ என்ற வீடியோவை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

New Delhi:

பாஜகவின் ‘நானும் காவலாளி தான்' என்கின்ற புதிய பிரசார வீடியோ நேற்று வெளியான நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் 'காவலாளி நரேந்திர மோடி' என தனது கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர் அமித்ஷாவும் தனது டிவிட்டர் கணக்கின் பெயரை, 'காவலாளி அமித்ஷா' என்று மாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன், தாமேந்திர பிரதான் உள்ளிட்டோரும் தங்கள் டிவிட்டர் கணக்கின் பெயரை காவலாளி என்று மாற்றி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேசிய தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நானும் காவலாளிதான்' என்கின்ற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

மேலும், அந்த பதிவில், பிரதமர் மோடி, ‘உங்கள் காவலாளி தேசத்துடன் துணை நிற்கிறார். ஆனால், நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழலை, சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறார்களோ அவர்கள் எல்லாம் காவலாளிகள்தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று அனைத்து இந்தியர்களும் ‘நானும் காவலாளிதான் என்று கூறுகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரஃபேல் ஒப்பந்த விவாரம் குறித்து பிரதமர் மோடியை தொடர்ந்து குற்றம்ச்சாட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'காவலாளி ஒரு திருடன்' என கூறிவருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே பாஜக இந்த ‘நானும் காவலாளி தான்' பிரசாரத்தை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உரிமைதுறப்பு: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் என்டிடிவி மீது ரூ.10,000 கோடி கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

.