ஓரு பிரபலமான சிவில் இஞ்சினியரிங் துறை சார்ந்த பக்கத்தில், நேற்று சுத்தியல் ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு 'இது என்ன?' என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அந்த பதிவிற்கு கீழே கமெண்ட் செய்த ஒருவர்,"இது சுத்தியல், இதை பயன்படுத்தும்போது 'டங்! டங்!' என்று சத்தம் கேட்கும். ஒரு ஜமீன் மாளிகையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, பெய்ன்ட் காண்ட்ரேக்டர் நேசமணியின் தலைமீது, சுத்தியலை போட்டுவிடுவார்கள். பாவம்" என்று கூறியிருப்பார். அதற்கு "அவர் இப்போது நலமாக உள்ளார், நாம் அவருக்காக வேண்டிக்கொள்வோம், "#Pray_For_Nesamani" என்று பதிலளித்திருப்பார். அங்கு தான், இந்த சம்பவம் துவங்கியது. இன்று, இது உலக அளவு ட்ரெண்டிங் ஹேஸ்டேக்.
இதன் பிறகு, நேசமணி என்ற பெயர் உலக அளவில் எதிரொலித்தது. டிவிட்டரில் பலரும் '#Pray_For_Nesamani' என்ற ஹேஸ்டேக்கில் தங்கள் பதிவுகளை பதிவிட்டு வந்தனர். இந்த ஹேஸ்டேக், தற்போது, தமிழ்நாடு, இந்தியா அனைத்தையும் தாண்டி உலக அளவில் ட்ரெண்டானது.
பல மணி நேரங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்த நேசமணி என்ற பெயர், ட்விட்டர் ட்ரெனண்டில் இருந்து கீழ் இரங்கவில்லை. இன்னிலையில், நெட்டிசன்கள் பலர் தன் பெயர்களுக்கு முன் 'காண்ட்ராக்டர்' என்ற வார்த்தையை இணைத்துள்ளார்கள். வடிவேலு 18 ஆண்டுகளுக்கு முன் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் தான், நேசமணி, 'காண்ட்ராக்டர்' நேசமணி. அந்த திரைப்படத்தில், அவர் ஏற்று நடத்திருப்பது ஒரு காண்ட்ராக்டர் வேடம் தான்.
இன்னிலையில் இந்திய பிரதமராக மோடி இன்று பதவியேற்கவுள்ளார். அதற்கு சமந்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஹேஸ்டேக் தான் '#ModiSarkar2'. இன்னிலையில், இந்த ஹேஸ்டேக்கை பின்னுக்கு தள்ளி, '#Nesamani' ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்னும், அந்த ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்.