This Article is From Mar 15, 2019

நியூசி., மசூதியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி! - உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்!

Christchurch Mosque Shooting, New Zealand: இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு திரும்பி பார்த்து போது, 4 பேர் ரத்த வெளத்தில் கீழே விழுந்து கிடந்தனர்.

New Zealand Shooting: 2 மசூதிகளில் (Mosque) மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Christchurch, New Zealand:

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலின் போது மசூதியில் நூற்றுக்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். இதனால், மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்தடுத்து, இரண்டு இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து பார்க்கும் போது, அவர்கள் நியூசிலாந்தில் யாரும் மசூதிக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுப்பதாக தெரிகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறும்போது, இன்றைய நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 6 பேர் உயிர் இழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதி மிகவும் புகழ்பெற்றது. இங்கு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி வீரர்கள் நியூசிலாந்திற்கு சென்றுள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். தற்போது அவர்கள் பத்திரமாக ஓட்டலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.