வீடியோ 20.3 மில்லியன் முறை பார்க்கப்பட்டது
நீதிபதி மோஜிகா தனது 2 வயது குழந்தைக்கு வாழைப்பழம் ஒன்றினை பரிசாக கொடுத்ததும் அவள் ஏமாந்து போய் விடுவாள் என்று எண்ணியுள்ளார். மாறாக 2 வயது மகள் தனக்கு கிடைத்த பரிசை பெரு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ட்விட்டரில் எல்ஜிஎண்டி என்ற பயனர் மூலம் நீதிபதி மோஜிகா தனது மகள் வாழைப்பழத்தை பரிசாக பெற்றதற்கு கிடைத்த எதிர்வினை குறித்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
வாழைப்பழம் என்று ஆச்சரியத்துடன் வீடியோ தொடங்கிறது. பின் பரிசாக கிடைத்த வாழைப்பழத்தை உரித்து உற்சாகமாக சாப்பிடுகிறாள். தனக்கு கிடைத்த பரிசில் வெகுவாக மகிழ்ச்சியடைவதை பார்க்கலாம்.
எனது மகளுக்கு மிக மோசமான கிறிஸ்துமஸ் பரிசை கொடுக்க முயற்சித்தேன். ஆனால் இந்த ரியாக்ஸனை எதிர்பார்க்கவில்லை என்ற குறிப்புடன் மோஜிகா வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து வீடியோ 20.3 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. இது 1.4 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்றது.
வைரலான வீடியோவில் தனது மகளின் ரியாக்சனைப் பற்றி யு.எஸ்.ஏ டுடேவில் மோஜிகா பேசியுள்ளார்.
“இதற்காக அவர் உற்சாகப்படுவார் என்று நினைக்கவில்லை. அவர் உண்மையிலேயே நன்றியுள்ளவர் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் மீண்டும் பிஸ்கட்டினை கொடுத்தாலும் அதையும் இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வால்.
Click for more
trending news