This Article is From Nov 14, 2019

ஸ்கூலை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடிச்சு, துவைச்சு, ஐயன் பண்ணி விடுவேன் : வைராலாகும் பள்ளி சிறுமியின் பேச்சு

கேள்வி: மோடிக்கு என்ன சொல்ல விரும்புறீங்க? மோடியை கண்டிப்பா ஒருவாட்டி தோக்கடிக்கத்தான் வேணும் என்று கூற வீடியோ முடிகிறது

ஸ்கூலை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடிச்சு, துவைச்சு, ஐயன் பண்ணி விடுவேன் : வைராலாகும் பள்ளி சிறுமியின் பேச்சு

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 2.4 முறை பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள கல்விமுறையில் உள்ள அழுத்தம் குறித்து சிறுமி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.  

அந்த வீடியோவில் சிறுமி பள்ளிக்கு செல்வதில் உள்ள சிரமத்தை சலிப்பும், கடுப்புமாக பேசுவதை பார்க்கலாம். பள்ளிக்கூடத்தை உருவாக்கினவுங்க கிடைச்சா என்ன பண்ணுவ என்று கேட்ட கேள்விக்கு, அந்த ஆளை பிடித்து துவைச்சு, தண்ணி தெளிச்சு இஸ்திரி பண்ணிடுவேன் என்று பதில் சொல்கிறார். மோடிக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என்று கேட்க, கட்டாயம் ஒருமுறை அவரை தோற்கடிக்கத்தான் வேண்டும் என்று பதில் சொல்ல சுற்றிலும் உள்ளவர்கள் சிரிக்கிறார்கள் 

குழந்தைபேசும்வீடியோவின்தமிழ்மொழிபெயர்ப்புஇதுதான்

எனக்கு இந்த ஸ்கூல்ல இருந்து விடுதலை வேணும்...ஒரு மாசம்...
காலைல எழுந்திருக்கணும்
பிரஷ் பண்ணனும்
தண்ணி குடிக்கணும்
வேக, வேகமா பால் குடிச்சிட்டு
ஸ்கூலுக்கு ஓடணும்...

அங்க ஓடிப்போய் உக்காந்தா, அப்புறம், பிரேயர், இங்கிலீஸ், மேத்க்ஸ், இங்கிலீஸ், பின்னாடி ஈ.வி.எஸ் அப்புறம், குஜரத்தி, அதுக்கு பின்னாடி ஜிகே, ஜிகேனா மேத்ஸ் ஓகேவா

கேள்வி: இந்த பள்ளிக்கூடத்தை உருவாக்குனவங்க கிடைச்சா என்ன பண்ணுவீங்க மேடம்?

அந்த ஆளை பிடிச்சு துவைச்சு,தண்ணி தெளிச்சு, இஸ்திரி பண்ணிடுவேன்...

கேள்வி: இந்த கடவுள் எல்லாம் நல்லதாத்தானே படைச்சிருக்காரு....?

அந்த கடவுள் படிக்கிறதையும் கூட நல்லதா படைச்சிருந்தா எங்களுக்கும் படிக்கிறதுக்கு மஜாவா இருந்திருக்கும்

கேள்வி: மோடிக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

மோடியை கண்டிப்பா ஒருவாட்டி தோக்கடிக்கத்தான் வேணும் என்று கூற வீடியோ முடிகிறது

இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் 2.4 முறை பார்க்கப்பட்டுள்ளது. 8,600 பேர் லைக் செய்துள்ளனர். பலரும் விதவிதமான கமெண்டுகளை கொடுத்தும் உள்ளனர். 

Click for more trending news


.