இதற்கு முன்னரே, தீவிரவாதிகள் என்று சந்தேகப்படுபவர்களை ஜி.என்.ஏ ஹாஸ்பல், துன்புறுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது
ஹைலைட்ஸ்
- 54 ஓட்டுக்கள் பெற்று கினா ஹெஸ்பல் சிஐஏ இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்
- தேர்வு செய்யப்படும் முதல் பெண் கினா ஹாஸ்பல் என்பது குறிப்பிடத்தக்கது
- சிஐஏ, பாதுகாப்பு, உளவு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும்
Washington, United States:
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள புலனாய்வுப் பிரிவான சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குப் புதிய இயக்குனராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவு சர்வதேச அளவில் பாதுகாப்பு, உளவு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். இந்த அமைப்பின் இயக்குனராக இருந்த மைக் பாம்பியோ அமெரிக்க அதிபரின் செயலராகத் தற்போது நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய இயக்குனருக்கான தேர்வுக்காக சிஐஏ துணை இயக்குனர் கினா ஹாஸ்பல் (61) பெயர் பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அமெரிக்க செனட் சபையில் 54 ஓட்டுக்கள் பெற்று கினா ஹெஸ்பல் சிஐஏ இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், "கினா ஹெஸ்பல் சிறந்த திறமைசாலி, அவர் அனைவருக்கும் முன்னோடியாக செயல்படுவார். அவரது குழு சிறப்பாக செயல்படும்" என்றார்.
சிஐஏ இயக்குனராக தேர்வு செய்யப்படும் முதல் பெண் கினா ஹாஸ்பல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1985ல் சிஐஏவில் சேர்ந்தார். தொடர்ந்து 2017ல் சிஐஏவின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.