This Article is From Dec 18, 2019

இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகள் இந்துக்களை திருப்பி அனுப்பினால் இந்தியா ஏற்குமா? சீமான் கேள்வி!!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்படும் முஸ்லிம் அல்லாதோருக்கு, குடியுரிமை சட்டம் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டம் வெடித்துள்ளது.

இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகள் இந்துக்களை திருப்பி அனுப்பினால் இந்தியா ஏற்குமா? சீமான் கேள்வி!!

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகள் இந்துக்களை திருப்பி அனுப்பினால் அவர்களை இந்தியா ஏற்குமா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பியுள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்படும் முஸ்லிம் அல்லாதோருக்கு, குடியுரிமை சட்டம் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டம் வெடித்துள்ளது.

குடியுரிமை சட்டம் மசோதாவை இருந்தபோது அதனை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

மாநிலங்களை பொறுத்தளவில் பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் ஆகியவை குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலங்களில் நிறைவேற்ற விட மாட்டோம் என்று தெரிவித்துள்ளன. 

இதற்கிடையே, தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் போராட்டம் ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- 

உலகில் பல்வேறு நாடுகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளாகத்தான் உள்ளன. அந்த நாடுகளில் வாழ்கிற இந்துக்கள், இந்தியர்கள் அங்கு அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை பெற்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை அந்த நாடுகள் குடியுரிமை அற்றவர்களாக திருப்பி அனுப்பினால், நீங்கள் அந்த வேலை வாய்ப்பை கொடுக்க, அவர்கள் வாங்குகின்றன ஊதியத்தை அளிக்க, அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை கொடுக்க மத்திய அரசு தயாராக உள்ளதா?
இவ்வாறு சீமான் பேசினார். 

.