This Article is From Dec 20, 2019

வன்முறையில் ஈடுபடுவர்கள் அடையாளம் காணப்பட்டு ‘பழிவாங்கப்படுவார்கள்' - யோகி ஆதித்யநாத்

பொது சொத்துக்களை தேசப்படுத்தியவர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இழப்புகளை ஈடு செய்ய ஏலம் விடப்படும்” என்று கூறியுள்ளார்.

ஒரு ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை (File)

Lucknow:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மீதான வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும், ஏற்பட்ட இழப்புக்கு அவர்களின் சொத்துக்களை ஏலம்விட்டு “பழிவாங்குவோம்” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

“ஒரு ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு காங்கிரஸ், எஸ்பி மற்றும் இடதுசாரி கட்சிகள் முழு நாட்டையும் தீக்குளிக்க வைக்கின்றன” என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். 

“லக்னோ மற்றும் சம்பலில் வன்முறை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதை கடுமையாக கையாள்வோம். பொது சொத்துக்களை தேசப்படுத்தியவர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இழப்புகளை ஈடு செய்ய ஏலம் விடப்படும்” என்று கூறியுள்ளார். 

வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் வழியே கண்டுபிடிக்கப்படுவார்கள். நாங்கள் அவர்களை பழிவாக்குவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறினார். 

சிஆர்பிசியின் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் நவம்பர் 8 முதல் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன என்றும் அனுமதியின்றி எந்த ஆர்ப்பாட்டமும் நடைபெற முடியாது என்று கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறை ஏற்புடையதல்ல. நான் அதிகாரிகளுடன் பேசினேன். சாமானியர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்வேன். ஆனால் வன்முறையில் ஈடுபடுவோரை நாங்கள் கண்டிப்பாக எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம்  எந்த மதத்திற்கும் அல்லது சமூகத்தின் ஒரு பிரிவினருக்கும் எதிரானது அல்ல. இது மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு உதவும் என்று ஆதித்ய நாத் வாதிட்டார். 

.