This Article is From Dec 23, 2019

திமுக பேரணிக்கு அனுமதி : பேரணி நிகழ்வுகள் காணொளியாக பதிவு செய்யப்படவேண்டும்

பேரணியின் போது பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை திமுக சரி செய்ய வேண்டும் என்றும். பேரணி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

திமுக பேரணிக்கு அனுமதி : பேரணி நிகழ்வுகள் காணொளியாக பதிவு செய்யப்படவேண்டும்

சட்டம் எந்தவொரு சமூகத்திற்கும் உதவுவதை விட முஸ்லிம்களின் உரிமைகளை மறுப்பதை நோக்கமாக கொண்டது

Chennai:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக இன்று பேரணி நடத்த முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பான வழக்கை அவசர வழக்காக கருதி நேற்று இரவு விசாரித்தது உச்ச நீதிமன்றம். இதனை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பிடி ஆஷா ஆகியோர் அமர்வு திமுக பேரணிக்கு எதிரான வழக்கை விசாரித்தனர்.

பேரணியின் போது பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை திமுக சரி செய்ய வேண்டும் என்றும். பேரணி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. 

செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி திட்டமிட்டபடி நடக்கும். பேரணிக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது எங்களுக்கு ஒரு பெரிய வெற்றி”என்று குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலின் சமூகத்தின் அனைத்து பிரிவினர்களூம் பேரணியில் பங்கேற்குமாறு வேண்டுகோள்விடுத்தார். குடியுரிமை திருத்த சட்டம் “அவசரமான மற்றும் எதேச்சதிகார சட்டம் எந்தவொரு சமூகத்திற்கும் உதவுவதை விட முஸ்லிம்களின் உரிமைகளை மறுப்பதை நோக்கமாக கொண்டது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் ஸ்டாலின் “மேல் அவையில் அதிமுக ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை திருத்த மசோதா தோல்வியுற்றிருக்கும் என்றும் நாட்டையே குழப்பத்தில் தள்ளியிருக்கும் மத்திய அரசின் திட்டம் வெற்றி பெற்றிருக்காது” என்றார்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. அதிமுக மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் அது மாநிலங்களவையில் 116 முதல் 114 வரை தோற்கடிக்கப்பட்டிருக்கும். 

குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். திருத்தப்பட்ட சட்டம் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பாதிக்கும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்” என்று கூறினார்.

மத துன்புறுத்தல்  காரணமாக மூன்று முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை பெற இது உதவுகிறது. இது முஸ்லிம்கள் மீது பாகுபாடு காண்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 

.