Roads have been barricaded in many parts of the capital in view of the planned protest.
New Delhi: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
குறிப்பாக டெல்லி – குர்கான் எல்லையில் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. மத்திய டெல்லி பகுதியிலும் மக்கள் கூடுவதற்கு போலீசார் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
கார்கள் மூலம் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக, ஒவ்வொரு காரும் போலீசாரால் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. முஸ்லீம் அல்லாதவர்கள் புலம் பெயர்ந்தோருக்கான குடியுரிமையை விரைந்து பெற உதவும் சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டது.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்கு மண்டி மாளிகையிலிருந்து ஜந்தர் மந்தர் வரை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை ட்வீட்டில் அறிவித்தது.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மதுரா சாலை- கலிண்டி குஞ்ச் பாதை மூடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்தனர். விமானத்தின் மூலம் செல்ல விரும்புகிறவர்கள் விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று விட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜாமியா மில்லியா, இஸ்லாமியா ஐசோலா விஹார், ஷாஹீன் பாக், படேல் ஐசக், லோக் கல்யாண் மார்க், உத்யோக் பவன், ஐடிஓ, பிரகதி மைதானம், கான் சந்தை மற்றும் முனீர்கா நிலையங்களில் உள்ளே நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.