ஹைலைட்ஸ்
- Ekta and Ravi Shekhar arrested in Varanasi for citizenship law protest
- Ayra, their 14-month-old daughter, being taken care of by her relatives
- Over 60 people arrested in Varanasi for protest despite ban on gatherings
வாரணாசியில் கடந்த 19-ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக சமூக ஆர்வலர்களான ஏக்தா சேகர் மற்றும் ரவி சேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஏக்தா மற்றும் ரவி ஆகியோருக்கு சம்பக் என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஆர்யா தற்போது ரவியின் சகோதரரின் பராமரிப்பில் இருக்கிறார்.
“என் மகன் ஒரு குற்றமும் செய்யவில்லை. காவல்துறை அவரை ஏன் கைது செய்தது? 14மாத குழந்தை தாய் இல்லாமல் எப்படி வாழும். இதை கற்பனை செய்ய முடிகிறதா? அராஜகத்தை கட்டுப்படுத்த என்ன வழி?” ரவி சேகரின் தாயார் ஷீலா திவாரி கூறினார்.
“குழந்தை ஆர்யா சாப்பிடவில்லை. எப்படியாவது ஒரு ஸ்பூன் உணவை மட்டுமே அளிக்க முடிகிறது. ‘அம்மா வா, அப்பா வா' என்று அவள் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். வாருவார்கள் வருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று குழந்தையின் பாட்டி கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கைது செய்துள்ளது. அம்மாநில காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்வது நியாயம் என்று வாதிடுகிறது.